
நாட்டிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடைய சொத்துப் பட்டியலை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) திங்கள்கிழமை வெளியிட்டது. இதில் அதிக சொத்து மதிப்புடைய முதல்வராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 931 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
மிகக் குறைவான சொத்து மதிப்புடைய முதல்வராக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 15 லட்சத்துக்கு மேல் உள்ளது.
இந்தப் பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் 14-வது இடத்தில் உள்ளார். முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு ரூ. 8 கோடிக்கும் மேல் உள்ளது.
2023-24 நிதியாண்டில் நாட்டின் தனிநபர் வருமானம் சராசரியாக ரூ. 1.85 லட்சம். இதுவே ஒரு மாநில முதல்வரின் சுய வருமானம் சராசரியாக ரூ. 13.64 லட்சம். நாட்டின் சராசரி தனிநபர் வருமானத்தைக் காட்டிலும் இது 7.3 மடங்கு அதிகம்.
நாட்டில் மொத்தமுள்ள 31 முதல்வர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,630 கோடி.
முதல்வர்களின் சொத்து மதிப்பு
மாநிலம் - முதல்வர் - கட்சி - சொத்து மதிப்பு
ஆந்திரப் பிரதேசம் - சந்திரபாபு நாயுடு - தெலுங்கு தேசம் - ரூ. 931 கோடி+
அருணாச்சலப் பிரதேசம் - பெமா காண்டு - பாஜக - ரூ. 332 கோடி+
கர்நாடகம் - சித்தராமையா - காங்கிரஸ் - ரூ. 51 கோடி+
நாகாலாந்து - நெஃப்யூ ரியோ - என்டிபிபி - ரூ. 46 கோடி+
மத்தியப் பிரதேசம் - டாக்டர். மோஹன் யாதவ் - பாஜக - ரூ. 42 கோடி+
புதுச்சேரி - என். ரங்கசாமி - என்.ஆர். காங்கிரஸ் - ரூ.38 கோடி+
தெலங்கானா - ரேவந்த் ரெட்டி - காங்கிரஸ் ரூ. 30 கோடி+
ஜார்க்கண்ட் - ஹேமந்த் சோரன் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - ரூ. 25 கோடி+
அசாம் - ஹிமந்த விஸ்வ சர்மா - பாஜக - ரூ. 17 கோடி+
மேகாலயா - கான்ரட் கே. சங்மா - தேசிய மக்கள் கட்சி - ரூ. 14 கோடி+
திரிபுரா - மாணிக் சாஹா - பாஜக ரூ. 13 கோடி+
மஹாராஷ்டிரம் - தேவேந்திர ஃபட்னவீஸ் - பாஜக - ரூ. 13 கோடி+
கோவா - பிரமோத் சாவந்த் - பாஜக - ரூ. 9 கோடி+
தமிழ்நாடு - மு.க. ஸ்டாலின் - திமுக - ரூ. 8 கோடி+
குஜராத் - பூபேந்திர படேல் - பாஜக - ரூ. 8 கோடி+
ஹிமாச்சலப் பிரதேசம் - சுக்விந்தர் சிங் - காங்கிரஸ் - ரூ. 7 கோடி+
சிக்கிம் - பிஎஸ் தமங் - சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா - ரூ. 6 கோடி+
ஹரியாணா - நாயப் சிங் - பாஜக - ரூ. 5 கோடி+
உத்தரண்ட் - புஷ்கர் சிங் தாமி - பாஜக ரூ. 4 கோடி+
மிசோரம் - லால்துஹோமா - சோரம் மக்கள் இயக்கம் - ரூ. 4 கோடி+
சத்தீஸ்கர் - விஷ்ணு தியோ சாய் - பாஜக - ரூ. 3 கோடி+
ஒடிஷா - மோஹன் சரன் மாஜி - பாஜக ரூ. 1 கோடி+
பஞ்சாப் - பகவந்த் மான் சிங் - ஆம் ஆத்மி - ரூ. 1 கோடி+
பிஹார் - நிதிஷ் குமார் - ஐக்கிய ஜனதா தளம் - ரூ. 1 கோடி+
உத்தரப் பிரதேசம் - யோகி ஆதித்யநாத் - பாஜக - ரூ. 1 கோடி+
மணிப்பூர் - பிரேன் சிங் - பாஜக - ரூ. 1 கோடி+
ராஜஸ்தான் - பஜன் லால் சர்மா - பாஜக - ரூ. 1 கோடி+
தில்லி - ஆதிஷி - ஆம் ஆத்மி - ரூ. 1 கோடி+
கேரளம் - பினராயி விஜயன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - ரூ. 1 கோடி+
ஜம்மு - காஷ்மீர் - ஓமர் அப்துல்லா - ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி - ரூ. 55 லட்சம்+
மேற்கு வங்கம் - மமதா பானர்ஜி - திரிணமூல் காங்கிரஸ் - ரூ. 15 லட்சம்+