நக்ஸல் எதிர்ப்பு ஆய்வுக்கூட்டத்துக்கு தலைமையேற்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா

2015-ல் நக்ஸல் கிளர்ச்சியை ஒழிக்க மத்திய அரசு உருவாக்கிய கொள்கையின் பலனாகவே இது குறைந்துள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தகவல் தெரிவித்தார்
நக்ஸல் எதிர்ப்பு ஆய்வுக்கூட்டத்துக்கு தலைமையேற்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா
ANI
1 min read

ஆகஸ்ட் 23-ல் சத்தீஸ்கர் செல்லும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆகஸ்ட் 24-ல் அங்கு நடைபெறும் நக்ஸல் எதிர்ப்பு ஆய்வுக்கூட்டத்துக்கு தலைமையேற்கிறார். இதில் நக்ஸல் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் காவல்துறை தலைவர்களும், தலைமைச் செயலாளர்களும் பங்கேற்கின்றனர்.

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் நடக்கும் இந்த ஆய்வுக்கூட்டத்தில், நக்ஸல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நக்ஸல் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார் அமித் ஷா.

நக்ஸல் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் `ரெட் காரிடார்’ என்று மத்திய உள்துறை அமைச்சகத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப்பட்டியலில் ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒடிஷா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களுடன், கேரள மாநிலத்தின் காவல்துறை தலைவரும், இந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, 2013-ல் நக்ஸல் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 126 ஆக இருந்த நிலையில், ஏப்ரல் 2024-ல் இது 38 ஆக குறைந்துள்ளது. 2015-ல் நக்ஸல் கிளர்ச்சியை ஒழிக்க மத்திய அரசு உருவாக்கிய கொள்கையின் பலனாகவே இது குறைந்துள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தில் தெரிவித்தார்.

நக்ஸல் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக, புதிய சாலைகள், செல்போன் டவர்கள் அமைப்பது, திறன் மேம்பாடு பயிற்சிகள் அளிப்பது, குறுந்தொழில்களுக்குக் கடன் வழங்குவது என பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது மத்திய அரசு.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in