வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு ஆலோசனை: இண்டியா தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு

ஒருவேளை, இண்டியா கூட்டணிக்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கப்பெறவில்லையெனில்..
வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு ஆலோசனை: இண்டியா தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு
ANI

இண்டியா கூட்டணியின் மூத்த தலைவர்கள் நாளை இரவு அல்லது நாளை மறுநாள் காலை வரை தில்லியில் இருக்க வேண்டும் என காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பெரும்பாலான நிறுவனங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றும் என்று கணித்துள்ளன. இண்டியா கூட்டணி தலைவர்கள், நிச்சயமாக 295 இடங்களில் வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். இதன் இறுதி முடிவு நாளை தெரியவுள்ளது.

இந்த நிலையில், இண்டியா கூட்டணியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் நாளை இரவு வரை அல்லது நாளை மறுநாள் காலை வரை தில்லியில் இருக்க வேண்டும் என காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாக ஏஎன்ஐ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"இண்டியா கூட்டணியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அனைவரும் நாளை இரவு வரை அல்லது நாளை மறுநாள் காலை வரை தில்லியில் இருக்க வேண்டும் என காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஒருவேளை, இண்டியா கூட்டணிக்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கப்பெறவில்லையெனில், அடுத்த வாய்ப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்கள். தேர்தல் ஆணையத்தின் பங்கு குறித்து செய்தியாளர்களைச் சந்திப்பது, குடியரசுத் தலைவரைச் சந்திப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன" என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in