அஸ்ஸாமில் யானைகளை காப்பாற்றிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!

இதே போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கோவையின் மதுக்கரை பகுதியில் உள்ள தண்டவாளங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
அஸ்ஸாமில் யானைகளை காப்பாற்றிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!
1 min read

இரவு நேரத்தில் யானைகள் தண்டவாளத்தை கடந்த சென்றபோது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் உதவியுடன் அஸ்ஸாமில் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த அக்.16-ல் அஸ்ஸாம் மாநிலத்தின் லும்டிங் ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது காம்ரூப் விரைவு ரயில். இரவு 8.30 அளவில் ஹவாய்பூர் மற்றும் லம்சகாங் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் பாதையில் காம்ரூப் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.

இதை அடுத்து ரயிலுக்கு வெளியே பார்த்த ஓட்டுனர்கள் ஜெ.டி. தாஸுக்கும், உமேஷ் குமாருக்கும் கூட்டம் கூட்டமாக யானைகள் ரயில் தண்டவாளத்தை தாண்டிச் செல்லும் காட்சி தெரிந்துள்ளது. இருவரும் உடனே அவசர கால பிரேக்கை அழுத்தி காம்ரூப் ரயிலை நிறுத்தியுள்ளனர். அந்த நேரத்தில் மட்டும் சுமார் 60 யானைகள் ரயில் தண்டவாளத்தைக் கடந்து சென்றுள்ளன.

யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ள இந்தப் பகுதியின் ரயில் தண்டவாளங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பொறுத்தப்பட்டுள்ளது. யானைகள் தண்டவாளங்களை கடக்கும் பட்சத்தில் உடனடியாக எச்சரிக்கை மணி ஒலிக்கும். இதை அடுத்து அருகில் வந்துகொண்டிருக்கும் ரயில் ஓட்டுனர்கள் அவசர கால பிரேக்கை அழுத்தவேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பான காணொளியை தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் வெளியிட்டுள்ளார் தமிழக சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ். மேலும் இதே போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கோவையின் மதுக்கரை பகுதியில் உள்ள தண்டவாளங்களில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in