
அஹமதாபாத்தில் இன்று (ஜூன் 12) விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளின் முழுமையான பட்டியல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கியது.
இந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டவர்களில் ஒருவராக முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் இருந்துள்ளார். முதல் வகுப்பில் பயணச்சீட்டை முன்பதிவு செய்திருந்த ரூபானி, லண்டனில் உள்ள தனது மகளை பார்க்கவே இந்த பயணத்தை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானப் பயணிகள் உள்பட 242 பேர் இந்த விமானத்திற்குள் இருந்துள்ளனர். இது தொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட தகவல்களின்படி, இந்தியாவைச் சேர்ந்த 169 பேரும், பிரிட்டனைச் சேர்ந்த 53 பேரும், போர்த்துகீஸை சேர்ந்த 7 பேரும், கனடாவைச் சேர்ந்த ஒருவரும் விமானத்தில் இருந்துள்ளனர்.
அதேநேரம், பயணிகளின் பெயர் பட்டியலுடன் அவர்களின் கடவுச்சீட்டு எண்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்தன. ஏர் இந்தியாவின் இத்தகைய செயலால் பயணிகளின் தனி உரிமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி இணையவாசிகள் சிலர் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.