விண்ணில் செலுத்தப்பட்ட தனியார் நிறுவன ராக்கெட்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த ராக்கெட் ஏவுதல் திட்டம் நான்கு முறை கைவிடப்பட்ட நிலையில், தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
அக்னிபான்
அக்னிபான்@AgnikulCosmos

சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

கடந்த, 2017-ல் சென்னை ஐஐடியை சேர்ந்த இரண்டு இளம் பொறியாளர்களால் துவங்கப்பட்டது அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம். சென்னை ஐஐடி உடன் இணைந்து செயல்படும் இந்த தனியார் நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனியார் ஏவுதளத்தை அமைத்து ‘அக்னிபான் சார்டெட்’ என்ற ராக்கெட்டை வடிவமைத்தது.

இரண்டு அடுக்கு ஏவுதல் திறன் கொண்ட இந்த ராக்கெட் 300 கிலோ எடையும் 700 கிலோ மீட்டர் தூரம் பயனிக்கக் கூடிய திறன் கொண்டது.

இந்நிலையில் அக்னிபான் ராக்கெட் இன்று காலை 7.15 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், செமி கிரையோஜெனிக் மூலம் இந்த ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதாகவும், இந்த ராக்கெட் நாட்டிலேயே முதல் செமி கிரையோஜெனிக் என்ஜின் அடிப்படையிலான ராக்கெட் எனவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

முன்னதாக, தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த ராக்கெட் ஏவுதல் திட்டம் நான்கு முறை கைவிடப்பட்ட நிலையில், 5-வது முயற்சியில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in