பஞ்சாப் விவசாயிகள் காயம், பேரணி நிறுத்தம்: இரு மாநில எல்லையில் நடந்தது என்ன?

பேரணியாக செல்ல அனுமதி வழங்கப்பட்ட 101 விவசாயிகளின் பெயர் பட்டியல் எங்களிடம் உள்ளது. ஆனால் இன்று வந்தவர்கள் பேரணி மேற்கொள்ள அனுமதிபெற்றவர்கள் அல்ல.
பஞ்சாப் விவசாயிகள் காயம், பேரணி நிறுத்தம்: இரு மாநில எல்லையில் நடந்தது என்ன?
1 min read

தில்லிக்குப் பேரணி செல்லும் வகையில் பஞ்சாபில் இருந்து ஹரியாணாவுக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதை அடுத்து பேரணி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றபோது பஞ்சாப்-ஹரியாணா மாநில எல்லையான ஷம்புவில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் 101 விவசாயிகளைக் கொண்ட குழு, மத்திய அரசுக்குத் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் நோக்கில், தில்லிக்குப் பேரணியாக செல்லும் வகையில் ஷம்புவை தாண்டி ஹரியாணாவுக்குள் இன்று (டிச.8) நுழைய முற்பட்டது.

ஆனால் விவசாயக் குழுவினர் ஹரியாணா காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து விவாசாயிகளை அங்கிருந்து கலைக்கும் நோக்கில் கண்ணீர் புகை குண்டுகளை காவல்துறையினர் வீசியுள்ளனர்.

கண்ணீர் புகை குண்டுகளால் பல விவசாயிகள் காயமடைந்த நிலையில், தில்லி பேரணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக விவசாய அமைப்பின் தலைவர் சர்வான் சிங் பாந்தர் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஹரியாணாவின் அம்பாலா மாவட்டத்தில் அனுமதியின்றி பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடை செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள ஹரியாணா காவல்துறையினர், `பேரணியாக செல்ல அனுமதி வழங்கப்பட்ட 101 விவசாயிகளின் பெயர் பட்டியல் எங்களிடம் உள்ளது. ஆனால் இன்று வந்தவர்கள் பேரணி மேற்கொள்ள அனுமதிபெற்றவர்கள் அல்ல. அவர்களது அடையாள அட்டைகளை காண்பிக்க மறுக்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரு கும்பலாக நுழைய முற்படுகின்றனர்’ என்றனர்.

காவல்துறையினரின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள சர்வான் சிங் பாந்தர், `விவசாயிகள் பட்டியலை நாங்கள் ஏற்கனவே வழங்கியுள்ளோம். எங்கள் அடையாள அட்டைகளை பரிசோதிக்க விரும்பியதை தெரிவித்திருந்தால் நாங்கள் ஒத்துழைப்பு வழங்கியிருப்போம். ஆனால் காற்று எங்கள் பக்கம் வீசியதை அதை எங்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. எந்தவித தியாகத்திற்கும் நாங்கள் தயார்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in