மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஒரு பார்வை!

மக்களவையின் முதல் எதிர்க்கட்சித் தலைவராக பீகாரைச் சேர்ந்த ராம் சுபாக் சிங் 1969 ல் பதவி ஏற்றார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஒரு பார்வை!

கடந்த இரு மக்களவைத் தேர்தலில் இல்லாத விதமாக இந்த முறை நடந்த 18வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 99 இடங்கள் கிடைத்து வலுவான எதிர்க்கட்சியாக மக்களவையில் அமர உள்ளது. தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தியைத் தேர்வு செய்யத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த முடிவு செயல்படுத்தப்பட்டால் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவார்.

மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் பதவி குறித்து சில தகவல்கள்:

1)    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி பற்றி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

2)    மக்களவையில் 10 சதவீதம் இடங்களைப் பெறும் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும்.

3)    கடந்த இரண்டு மக்களவையில் எந்த ஒரு கட்சிக்கும் 10 சதவீத இடம் கிடைக்காததால் எதிர்கட்சித்தலைவர் பதவி காலியாக இருந்தது.

4)    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து உள்ளது.

5)    தேசிய மனித உரிமைகள் ஆணையர், மத்திய ஊழல்தடுப்புத்துறை ஆணையர், சிபிஐ இயக்குனர் போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த பதவிகளின் நியமனங்களில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் முக்கியப் பங்கு வகிப்பார்.

6)    மக்களவையின் முதல் எதிர்க்கட்சித் தலைவராக பீகாரைச் சேர்ந்த ராம் சுபாக் சிங் 1969 ல் பதவி ஏற்றார்.

7)    மிகவும் குறைவான நாட்கள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த நபர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ். 1996 ல் 15 நாட்கள் மட்டுமே அவர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in