
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மாற்றுக் கட்சியிலிருந்து தலைவர்கள், தொண்டர்கள் என மொத்தம் 80 ஆயிரம் பேர் பாஜகவில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மாற்றுக் கட்சியினரை பாஜகவில் இணைப்பது உள்பட பல்வேறு வியூகங்களை பாஜக மேலிடம் வகுத்தது. மாற்றுக் கட்சியினரை பாஜகவில் இணைப்பதற்கெனத் தனியாக குழுக்களை அமைத்துள்ளது. இதுதொடர்பாக கிடைத்த தகவல்களின்படி மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு மற்றும் மத்தியப் பகுதி என ஐந்து பகுதிகள் உருவாக்கப்பட்டு அதற்கெனப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மாற்றுக் கட்சியிலிருந்து 1 லட்சம் பேரை பாஜகவில் இணைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். தகவலறிந்த வட்டாரங்களின்படி இதுவரை ஏறத்தாழ தலைவர்கள், நிர்வாகிகள் என 80 ஆயிரம் பேர் பாஜகவில் இணைந்துள்ளார்கள்.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான், ரிதேஷ் பாண்டே மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து சங்கீதா ஆசாத், ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி, லால்சந்த் கடாரியா, பர்னீத் கௌர், ஜோதி மிர்தா, திரிணமூல் காங்கிரஸிலிருந்து அர்ஜுன் சிங் என பல்வேறு முக்கியத் தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளார்கள்.