ஜூலை 1 முதல் தட்கல் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்: ரயில்வே அமைச்சகம்

இந்திய ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் ஏஜென்டுகளுக்கும் தட்கலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஜூலை 1 முதல் தட்கல் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்: ரயில்வே அமைச்சகம்
1 min read

ஐஆர்சிடிசியில் ஜூலை 1 முதல் ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்களால் மட்டுமே தட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதேபோல, ரயில் நிலையங்கள் அல்லது இந்திய ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் மூலம் தட்கல் முன்பதிவு செய்ய ஆதார் சார்ந்த ஓடிபி அவசியம். அதாவது முன்பதிவு செய்யும்போது ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள செல்ஃபோன் எண்ணைப் பகிர வேண்டும். அந்த மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி (ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொல்) மூலமே தட்கல் முன்பதிவு செய்ய முடியும். இது ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் ஏஜென்டுகளுக்கும் தட்கலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தட்கல் முன்பதிவின் முதல் அரை மணி நேரத்துக்கு ஏஜென்டுகளால் முன்பதிவு செய்ய முடியாது. ஏசி வகுப்புக்கான தட்கல் முன்பதிவை காலை 10 மணி முதல் காலை 10.30 மணி வரை செய்ய முடியாது. ஏசி அல்லாத வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவை காலை 11 மணி முதல் காலை 11.30 மணி வரை செய்ய முடியாது.

தட்கல் முறையின் பயன்கள் சாதாரண மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், இம்மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in