வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா: கூட்டுக் குழுவில் ஒவைஸி, ஆ. ராசாவுக்கு இடம்

மக்களவையிலிருந்து 21 எம்.பி.க்கள், மாநிலங்களவையிலிருந்து 10 எம்.பி.க்கள் என மொத்தம் 31 எம்.பி.க்கள் இதில் இடம்பெறுகிறார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் அசாதுதீன் ஒவைஸி, ஆ. ராசா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளார்கள்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.

மசோதாவை அறிமுகம் செய்தவுடன் காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, தேசியவாத காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அகில இந்திய மஜ்லீஸ் கட்சி உள்ளிட்டவை எதிர்ப்புகளைப் பதிவு செய்தன.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கமளித்தார்.

சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புகள் வலுத்ததையடுத்து, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இதை நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஆய்வுக்குப் பரிந்துரைத்தார்.

இந்தக் குழுவில் மக்களவையிலிருந்து 21 எம்.பி.க்களை முன்மொழிந்து மக்களவைச் செயலருக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடிதம் எழுதியுள்ளார். மேலும், மாநிலங்களவையிலிருந்து 10 எம்.பி.க்கள் விரைவில் முன்மொழியப்படவுள்ளார்கள்.

அடுத்த கூட்டத்தொடரின் முதல் வார இறுதி நாளில் இந்தக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளது.

மக்களவையிலிருந்து குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி.க்கள்:

  1. ஜெதாம்பிகா பால்

  2. நிஷிகாந்த் துபே

  3. தேஜஸ்வி சூர்யா

  4. அபராஜிதா சாரங்கி

  5. சஞ்சய் ஜெயிஸ்வால்

  6. திலிப் சைகியா

  7. அபிஜித் கங்கோபாத்யாய்

  8. டி.கே. அருணா

  9. கௌரவ் கோகோய்

  10. இம்ரான் மசூத்

  11. முகமது ஜாவெத்

  12. மோஹிபுல்லா

  13. கல்யான் பானர்ஜி

  14. ஆ. ராசா

  15. ஸ்ரீ கிருஷ்ணா தேவராயலு

  16. திலேஷ்வர் கமைத்

  17. அரவந்த் சாவந்த்

  18. சுரேஷ் கோபி

  19. நரேஷ் கணபத் மாஸ்கே

  20. அருண் பாரதி

  21. அசாதுதீன் ஒவைஸி

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in