

ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் வெங்கடேஷ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஷ்வர சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று ஏகாதசியை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் வந்தனர்.
அப்போது திடீரெனக் கோயிலில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில் கூறியிருப்பதாவது:- ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஷ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயர சம்பவத்தில் பக்தர்களின் மரணம் மிகவும் வேதனையளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சம்பவ இடத்திற்கு உள்ளூர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்” என்றார்.
In Andhra Pradesh, nine people tragically lost their lives in a stampede at the Sri Venkateswara Swamy Temple in Srikakulam. Chief Minister Chandrababu Naidu has expressed his condolences.