கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு 70 அடி உயரச் சிலை: கொல்கத்தாவில் திறப்பு | Lionel Messi |

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மெஸ்ஸி டிச. 15 அன்று பிரதமர் மோடியைச் சந்திக்கிறார்...
கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு 70 அடி உயரச் சிலை: கொல்கத்தாவில் திறப்பு
கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு 70 அடி உயரச் சிலை: கொல்கத்தாவில் திறப்புANI
1 min read

கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு 70 அடி உயரத்துடன் மிக பிரமாண்ட சிலை திறக்கப்பட்டது.

அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் 'ஃபிஃபா' உலக கோப்பையை வென்றது. இது உலகக் கால்பந்து ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக அமைந்தது. இதை இந்தியாவுடன் கொண்டாடும் நோக்கில் அர்ஜென்டினா அணி, 'இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின் படி, மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார் மெஸ்ஸி. அவருடன் உருகுவேயின் லுாயிஸ் சாரஸ், அர்ஜென்டினா அணி மத்தியகள வீரர் ரோட்ரிகோ டி பால் ஆகியோர் உடன் வந்தனர். இவரது வருகையை ஒட்டி, கொல்கத்தா சால்ட் கேட் மைதானத்தில் மெஸ்ஸியின் 70 அடி உயரச் சிலை அமைக்கப்பட்டது.

இதைக் காணொளி காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். முன்னதாக, இன்று அதிகாலை கோல்கட்டா விமான நிலையத்தில், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மதியம் 2:00 மணிக்கு மெஸ்ஸி ஐதராபாத் செல்கிறார். அங்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட 7 பேர் பங்கேற்கும் நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் விளையாடுகிறார்.

நாளை (டிச. 14) இரண்டாவது நாள் நாளை மும்பை செல்கிறார். மாலை 5 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இரவில் 45 நிமிடம் 'பேஷன்' நிகழ்வு நடக்கும். இதில் கிரிக்கெட் நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மூன்றாவது நாள் நாளை மறுநாள் (டிச. 15), தில்லி செல்லும் மெஸ்ஸி, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார்.

Summary

A massive 70-foot-tall statue of footballer Lionel Messi was unveiled in Kolkata.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in