நான்காம் கட்டத் தேர்தல்: ஏறத்தாழ 63.04% வாக்குகள் பதிவு

அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 76.02% வாக்குகள் பதிவாகியுள்ளன.
நான்காம் கட்டத் தேர்தல்: ஏறத்தாழ 63.04% வாக்குகள் பதிவு
ANI

மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவில் ஏறத்தாழ 63.04% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 நாடாளுமன்றத் தொகுதிகளில் இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 76.02% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சம் ஜம்மு-காஷ்மீரில் 37-க்கும் குறைவான சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.

  • ஆந்திரப் பிரதேசம் - 68.20%

  • பிஹார் - 55.92%

  • ஜம்மு-காஷ்மீர் - 36.88%

  • ஜார்க்கண்ட் - 64.3%

  • மத்தியப் பிரதேசம் - 69.16%

  • மஹாராஷ்டிரம் - 52.93%

  • ஒடிசா - 64.23%

  • தெலங்கானா - 61.59%

  • உத்தரப் பிரதேசம் - 58.02%

  • மேற்கு வங்கம் - 76.02%

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒடிஷாவில் உள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதற்கட்டமாக 28 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ஆந்திரப் பிரதேசத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 67.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒடிஷாவில் மாலை 5 மணி நிலவரப்படி 62.96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in