6-ம் கட்டத் தேர்தல் நிறைவு: மாலை 5 மணி நிலவரப்படி 57.7% வாக்குப்பதிவு

அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 77.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
6-ம் கட்டத் தேர்தல் நிறைவு: மாலை 5 மணி நிலவரப்படி 57.7% வாக்குப்பதிவு
ANI

மக்களவைத் தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 57.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

6 மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 58 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பிஹாரில் 8 தொகுதிகள், ஹரியாணாவில் 10 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி, ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், தில்லியில் 7 தொகுதிகள், ஒடிஷாவில் 6 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள் என 58 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 6 மணிக்கு முன்பு வாக்குச் சாவடிக்கு வந்த மக்கள் வாக்களித்து வருகிறார்கள். மாலை 5 மணி நிலவரப்படி, 58 தொகுதிகளிலும் மொத்தம் 57.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 77.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

  • மேற்கு வங்கம் - 77.99 சதவீதம்

  • ஜார்க்கண்ட் - 61.41 சதவீதம்

  • உத்தரப் பிரதேசம் - 52.02 சதவீதம்

  • ஒடிஷா - 59.6 சதவீதம்

  • ஜம்மு & காஷ்மீர் - 51.35 சதவீதம்

  • பிஹார் - 52.24 சதவீதம்

  • ஹரியாணா - 55.93 சதவீதம்

  • தில்லி - 53.73 சதவீதம்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in