மக்களவைத் தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 56.68% வாக்குகள் பதிவு
மக்களவைத் தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு
1 min read

மக்களவைத் தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களிலுள்ள 49 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 56.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.

  • பிஹார் - 52.35% வாக்குப்பதிவு

  • ஜம்மு & காஷ்மீர் - 54.21% வாக்குப்பதிவு

  • ஜார்க்கண்ட் - 61.90% வாக்குப்பதிவு

  • லடாக் - 67.15% வாக்குப்பதிவு

  • மஹாராஷ்டிரம் - 48.66% வாக்குப்பதிவு

  • உத்தரப் பிரதேசம் - 55.80% வாக்குப்பதிவு

  • ஒடிஷா - 60.55% வாக்குப்பதிவு

  • மேற்கு வங்கம் - 73.00% வாக்குப்பதிவு

5-ம் கட்டத் தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களமிறங்கினார்கள். ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல், சிராக் பஸ்வான், ஒமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இதில் போட்டியிட்டுள்ளார்கள்.

இந்தத் தேர்தலில் 8.95 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in