மூன்றாம் கட்டத் தேர்தல்: 11 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் அதிக வாக்குப்பதிவு

மஹாராஷ்டிரத்தில் குறைந்தபட்சமாக 18.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
11 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் அதிக வாக்குப்பதிவு
11 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் அதிக வாக்குப்பதிவுANI

மஹாராஷ்டிரத்தில் 11 மணி நிலவரப்படி குறைந்தபட்சமாக 18.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ல் நடைபெற்றது.

கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் என 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 32.82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சமாக மஹாராஷ்டிரத்தில் 18.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

வாக்குப்பதிவு விவரம்:

அசாம் - 27.34%

பிஹார் - 24.41%

கர்நாடகம் - 24.48%

மத்தியப் பிரதேசம் - 30.21%

உத்தரப் பிரதேசம் - 26.12%

சத்தீஸ்கர் - 29.90%

மேற்கு வங்கம் - 32.82%

மஹாராஷ்டிரம் - 18.18%

குஜராத் - 24.35%

கோவா - 30.94%

தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டயூ - 24.69%

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in