மூன்றாம் கட்டத் தேர்தல்: 1 மணி நிலவரப்படி 39.92 சதவீத வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 49.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மூன்றாம் கட்டத் தேர்தல்
மூன்றாம் கட்டத் தேர்தல்ANI

மஹாராஷ்டிரத்தில் 1 மணி நிலவரப்படி குறைந்தபட்சமாக 31.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ல் நடைபெற்றது.

கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் என 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 49.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சமாக மஹாராஷ்டிரத்தில் 31.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

வாக்குப்பதிவு விவரம்:

அசாம் - 45.88%

பிஹார் - 36.69%

கர்நாடகம் - 41.59%

மத்தியப் பிரதேசம் - 44.67%

உத்தரப் பிரதேசம் - 38.12%

சத்தீஸ்கர் - 46.14%

மேற்கு வங்கம் - 49.27%

மஹாராஷ்டிரம் - 31.55%

குஜராத் - 37.83%

கோவா - 49.04%

தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டயூ - 39.94%

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in