இரண்டாம் கட்டத் தேர்தல்: 9 மணி நிலவரப்படி திரிபுராவில் அதிக வாக்குப்பதிவு

குறைந்தபட்சமாக மஹாராஷ்டிரத்தில் 7.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இரண்டாம் கட்டத் தேர்தல்
இரண்டாம் கட்டத் தேர்தல்ANI

திரிபுராவில் காலை 9 மணி நிலவரப்படி 16.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு முழுக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ல் நடைபெற்றது. ஏறத்தாழ 62 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிகபட்சமாக திரிபுராவில் காலை 9 மணி நிலவரப்படி 16.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சமாக மஹாராஷ்டிரத்தில் 7.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

வாக்குப்பதிவு விவரம்:

அசாம் - 9.71%

பிஹார் - 9.84%

கர்நாடகம் - 9.21%

ஜம்மு-காஷ்மீர் - 10.39%

கேரளம்-11.98%

மத்தியப் பிரதேசம் - 13.82%

உத்தரப் பிரதேசம் - 11.67%

சத்தீஸ்கர் - 15.42%

மேற்கு வங்கம் - 15.68%

மணிப்பூர் - 15.49%

திரிபுரா - 16.65%

மஹாராஷ்டிரம் - 7.45%

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in