2ஜி வழக்கு: சிபிஐ மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு

2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அனைவரும் சிறப்பு நீதிமன்றத்தால் 2017-ல் விடுவிக்கப்பட்டார்கள்.
ஆ. ராசா (கோப்புப்படம்)
ஆ. ராசா (கோப்புப்படம்)ANI

2ஜி அலைக்கற்று ஒதுக்கீடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, கனிமொழி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சிபிஐ-யின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2ஜி அலைக்கற்று ஒதுக்கீடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அனைவரும் சிறப்பு நீதிமன்றத்தால் டிசம்பர் 2017-ல் விடுவிக்கப்பட்டார்கள். இந்த உத்தரவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ 2018-ல் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சர்மா தெரிவித்துள்ளார். இந்த வழக்கானது மே 28-ம் தேதிக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக அக்டோபர் 21, 2009-ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஏப்ரல் 2014-ல் ஆ. ராசா, கனிமொழி மற்றும் தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in