5-ம் கட்டத் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குப்பதிவு

ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல், சிராக் பஸ்வான், ஒமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இதில் போட்டியிடுகிறார்கள்.
5-ம் கட்டத் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குப்பதிவு
ANI

மக்களவைத் தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களிலுள்ள 49 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

காலை 11 மணி நிலவரப்படி மொத்தம் 23.66% வாக்குகள் பதிவாகியுள்ளன.

  • பிஹார் - 21.11% வாக்குப்பதிவு

  • ஜம்மு & காஷ்மீர் - 21.37% வாக்குப்பதிவு

  • ஜார்க்கண்ட் - 26.18% வாக்குப்பதிவு

  • லடாக் - 27.87% வாக்குப்பதிவு

  • மஹாராஷ்டிரம் - 15.93% வாக்குப்பதிவு

  • உத்தரப் பிரதேசம் - 27.7% வாக்குப்பதிவு

  • ஒடிஷா - 21.07% வாக்குப்பதிவு

  • மேற்கு வங்கம் - 32.7% வாக்குப்பதிவு

5-ம் கட்டத் தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல், சிராக் பஸ்வான், ஒமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இதில் போட்டியிடுகிறார்கள்.

இந்தத் தேர்தலில் 8.95 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்களாக உள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in