தமிழக எம்.பி. அண்ணாதுரை உள்பட 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது

நிதித் துறை மற்றும் வேளாண் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுக்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக எம்.பி. அண்ணாதுரை உள்பட 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது
https://x.com/sansad_tv
1 min read

சன்சத் ரத்னா விருதுகள் 2025-க்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை உள்பட 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

நாடாளுமன்றத்தில் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தியதற்காக 2010 முதல் பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை சார்பில் சன்சத் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தின் தலைவர் ஹன்ஸ்ராஜ் அதிர் தலைமையிலான குழு விருதுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்யும்.

16-வது மற்றும் 17-வது மக்களவையிலும் நாடாளுமன்ற ஜனநாயத்துக்காக தொடர்ச்சியான சிறப்பான பங்களிப்பைச் செலுத்தியதற்காக சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு), மஹாராஷ்டிரம்), ஸ்ரீரங் பார்னே (சிவசேனை, மஹாராஷ்டிரம்) பத்ருஹரி மஹ்தாப் (பாஜக, ஒடிஷா), என் கே பிரேமசந்திரன் (ஆர்எஸ்பி, கேரளம்) ஆகியோருக்கு தேர்வுக் குழுவால் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சன்சத் ரத்னா விருதுக்குத் தேர்வான நாடாளுமன்ற உறுப்பினர்கள்:

ஸ்மிதா வாக் (பாஜக), அரவிந்த் சாவந்த் (சிவசேனை (உத்தவ் தாக்கரே தரப்பு)), நரேஷ் கண்பத் (சிவசேனை), வர்ஷா கெயிக்வாட் (காங்கிரஸ்), மேதா குல்கர்னி (பாஜக), பிரவீன் படேல் (பாஜக), ரவி கிஷன் (பாஜக), நிஷிகாந்த் துபே (பாஜக), வித்யூத் வரன் மஹதோ (பாஜக), பிபி சௌதரி (பாஜக), மதன் ராத்தோர் (பாஜக), சிஎன் அண்ணாதுரை (திமுக) மற்றும் திலிப் சைகியா (பாஜக).

இவர்களில் அதிகபட்சமாக மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 7 பேர். உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தானிலிருந்து தலா இருவர் தேர்வாகியிருக்கிறார்கள். ஒடிஷா, தமிழ்நாடு, கேரளம் மற்றும் அசாமிலிருந்து தலா ஒருவர் விருது பெறுகிறார்கள்.

நாடாளுமன்றத்துக்கு அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் நிதித் துறை மற்றும் வேளாண் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுக்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நிதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் பத்ருஹரி மஹ்தாப். வேளாண் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் சரண்ஜித் சிங் சன்னி.

சன்சத் ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி புதுதில்லியில் ஜூலை கடைசி வாரத்தில் நடைபெறும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in