தில்லி சிஎம் ஸ்ரீ பள்ளிகளில் நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் 11-வது வயது மாணவர் முறையீடு! | CM Shri Schools |

"நுழைவுத் தேர்வுகள் சட்டவிரோதமானது, பாரபட்சமானது."
தில்லி சிஎம் ஸ்ரீ பள்ளிகளில் நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் 11-வது வயது மாணவர் முறையீடு! | CM Shri Schools |
1 min read

சிஎம் ஸ்ரீ பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் தில்லி அரசின் கொள்கையை எதிர்த்து 11-வயது மாணவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தில்லியிலுள்ள அரசு சர்வோதயா பால வித்யாலயா பள்ளியைச் சேர்ந்தவர் 6-ம் வகுப்பு மாணவர் ஜன்மேஷ் சாகர். இவர் 2025-26-ம் கல்வியாண்டுக்காக சிஎம் ஸ்ரீ பள்ளியில் சேர விண்ணப்பித்துள்ளார். ஜூலை 23, 2025-ல் தில்லி அரசால் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையின்படி, செப்டம்பர் 13, 2025 அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வை ஜன்மேஷ் சாகர் எதிர்கொள்ள வேண்டும். இந்த நுழைவுத் தேர்வை எதிர்த்து ஜன்மேஷ் சாகர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 32-ன் கீழ் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நுழைவுத் தேர்வானது அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21-ஏ ஐ மீறும் வகையில் உள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21-ஏ கட்டாயக் கல்வியை உறுதி செய்கிறது. மேலும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் (ஆர்டிஇ-2009) பிரிவு 13-ஐ மீறும் வகையிலும் நுழைவுத் தேர்வு இருப்பதாக மாணவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இதுபோன்ற நுழைவுத் தேர்வுகள் சட்டவிரோதமானது, பாரபட்சமானது. குறிப்பாக, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் பிரிவு 2(பி)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள "குறிப்பிட்ட பிரிவு"-ன் கீழ் சிஎம் ஸ்ரீ பள்ளிகள் வருகிறது. எனவே, இச்சட்டத்தின் பிரிவு 13-ன் கீழ் இப்பள்ளியில் விண்ணப்பிப்பதற்கு எந்த விலக்கும் கிடையாது" என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு, "குறிப்பிட்ட பிரிவு" என்ற வரையறுக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு ஆர்டிஇ சட்டம் பொருந்தாது என தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இது அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21-ஏ மற்றும் ஆர்டிஇ சட்டப்பிரிவு 13 உடன் முரண்படுகிறது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. எனவே, மாணவர் சேர்க்கையை நுழைவுத் தேர்வு மூலம் நடத்தாமல் லாட்டர் முறையில் நடத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

CM Shri Schools | Delhi Schools | Supreme Court | Delhi Student | Entrance Exam | Entrance Exams |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in