ரீல்ஸ் மோகத்தால் பணியிட மாற்றம்: யார் இந்த ஓஷின் சர்மா?

அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவது இல்லை என நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக....
ஓஷின் சர்மா
ஓஷின் சர்மா@the.oshinsharma
1 min read

சமூக வலைத்தளங்களில் காணொளிகளை வெளியிட்டு மும்முரமாக இருந்த காரணத்தால் ஹிமாச்சல் பிரதேசத்தின் தாசில்தார் ஓஷின் சர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஒஷின் சர்மா, செம்பா மாவட்டத்தைச் சேர்ந்த பர்மோர் பகுதியைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை தரம்சாலாவில் பண்புரிந்ததால் அங்கு இடமாற்றம் ஆனார். ஹிமாச்சல் பிரதேசத்தின் நிர்வாகத் துறையில் ஜனவரி 2022-ல் பணிக்குச் சேர்ந்தார். 2021-ல் அப்போது தரம்சாலாவின் பாஜக எம்எல்ஏ-வாக இருந்த விஷாலைத் திருமணம் செய்தார். எனினும் கணவர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக அவரை விட்டுப் பிரிந்தார் ஒஷின் சர்மா.

இந்நிலையில் சந்தோல் பகுதியில் தாசில்தாராக பணிபுரிந்த இவர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான காரணம் ஓஷின் சர்மா தனது அலுவலகப் பணிகளை விடவும் சமூக லைத்தளங்களில் காணொளிகளை பதிவிடுவதில் அதிகக் கவனத்தை செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

சமீபகாலமாக அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவது இல்லை, இதனால் பல வேலைகள் முடிக்கப்படாமல் உள்ளன என்கிற குற்றச்சாட்டுக்கு ஆளானதால் ஓஷின் சர்மாவுக்கு அலுவலகத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனினும் தற்போது பணியிடம் குறித்த தகவலும் இதுவரை அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in