ரயில் பயணத்திலும் உணவு டெலிவரி: இந்திய ரயில்வேயுடன் கைகோர்த்த ஸொமாட்டோ!

ஏற்கெனவே இந்நிறுவனம் 10 லட்சம் ஆர்டர்களை ரயிலில் டெலிவரி செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஸொமாட்டோ
ஸொமாட்டோ@deepigoyal
1 min read

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸொமாட்டோ 100-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் உணவு வழங்க இந்திய ரயில்வேயுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ரயில் பயணத்தின் போது உணவு கிடைக்காமல் சிரமப்படுபவர்களின் பிரச்னைகளை தீர்க்கும் விதமாக, பயணிகளுக்கு ரயில் பெட்டியில் அமர்ந்திருக்கும் இடத்திற்கே சென்று டெலிவரி செய்யும் புதிய வசதியை ஸொமாட்டோ நிறுவனம் தொடங்கியுள்ளது.

இதற்காக இந்திய ரயில்வேயுடன் (ஐஆர்சிடிசி) ஒப்பந்தம் செய்துள்ளது ஸொமாட்டோ நிறுவனம்.

இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் ஸொமாட்டோ தனது உணவு சேவையை வழங்க உள்ளது. ஏற்கெனவே இந்நிறுவனம் 10 லட்சம் ஆர்டர்களை ரயிலில் டெலிவரி செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in