இன்ஸ்டாகிராமில் அதிக ஆதரவாளர்கள்: இந்தியளவில் ஷ்ரத்தா கபூருக்கு 2-வது இடம்!

270 மில்லியன் ஆதரவாளர்களுடன் யாரும் நெருங்க முடியாத உயரத்தில் இருக்கிறார் கோலி.
ஷ்ரத்தா கபூர்
ஷ்ரத்தா கபூர்ANI
1 min read

இன்ஸ்டாகிராமில் அதிக ஆதரவாளர்களை பெற்ற இந்தியர்கள் பட்டியலில், பிரியங்கா சோப்ராவை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தை பிடித்துள்ளார் ஷ்ரத்தா கபூர்.

பிரபல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் இந்திய பயனர்களிடம் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அதிக ஆதரவாளர்களை பெற்ற இந்தியர்கள் பட்டியலில் பிரதமர் மோடியை பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்தை பிடித்தார் ஷ்ரத்தா கபூர்.

இதைத் தொடர்ந்து தற்போது 2-வது இடத்தில் இருந்த பிரியங்கா சோப்ராவையும் பின்னுக்குத் தள்ளினார்.

92.2 மில்லியன் ஆதரவாளர்களுடன் இப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார் ஷ்ரத்தா கபூர்.

91.8 மில்லியன் ஆதரவாளர்களுடன் பிரியங்கா சோப்ரா 3-வது இடத்திலும், 91.3 மில்லியன் ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடி 4-வது இடத்திலும் உள்ளனர்.

இப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 270 மில்லியன் ஆதரவாளர்களை பெற்று யாரும் நெருங்க முடியாத உயரத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in