வினேஷ் போகாட் ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது இந்தியாவுக்கு பேரிழப்பு என்று பிரிஜ் பூஷனின் மகன் கரண் பூஷன் சிங் தெரிவித்துள்ளார்.
மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் நேற்று காலிறுதிக்கு முந்தையச் சுற்று, காலிறுதிச் சுற்று மற்றும் அரையிறுதிச் சுற்றில் அடுத்தடுத்து வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், 50 கிலோ எடையைக் காட்டிலும் 100 கிராம் அளவில் கூடுதல் எடையில் இருந்ததால், வினேஷ் போகாட் பாரிஸ் ஒலிம்பிக்ஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, “இது இந்தியாவுக்கு பேரிழப்பு, இதற்கு என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்” என்று உத்தரப் பிரதேசத்தின் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் கரண் பூஷன் சிங் தெரிவித்துள்ளார்.
இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷனின் மகனாவார்.