
தனிப்பட்ட காரணங்களுக்காக வில்லி விலகியதைத் தொடர்ந்து, லக்னௌ அணி மேட் ஹென்றியை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் போட்டி கடந்த 22-ல் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த லக்னௌ அணி இன்று பஞ்சாப் அணியுடன் விளையாடுகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றியை ரூ. 1.25 கோடிக்கு தேர்வு செய்துள்ளது லக்னௌ அணி.
தனிப்பட்ட காரணங்களுக்காக வில்லி ஐபிஎல்-ன் தொடக்கத்தில் ஒரு சில ஆட்டங்களில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஐபிஎல் போட்டியிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மேட் ஹென்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேட் ஹென்றி இதற்கு முன்பு சென்னை அணியில் இடம்பெற்றிருந்தார், ஆனால் அங்கு அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
2017-ல் பஞ்சாப் அணியில் விளையாடிய இவர் 2 ஆட்டங்களில் பங்கேற்று ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்நிலையில் லக்னௌ அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.