கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஹசரங்கா!

2024 டி20 உலகக் கோப்பையில் ஹசரங்கா தலைமையில் விளையாடிய இலங்கை அணி முதல் சுற்றுடன் வெளியேறியது.
கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஹசரங்கா!
கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஹசரங்கா!@icc
1 min read

இலங்கை அணியின் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து ஹசரங்கா விலகியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கை ஒருநாள் அணியின் கேப்டனாக குசால் மெண்டிஸும், டி20 அணியின் கேப்டனாக வனிந்து ஹசரங்காவும் நியமிக்கப்பட்டனர்.

2024 டி20 உலகக் கோப்பையில் ஹசரங்கா தலைமையில் விளையாடிய இலங்கை அணி முதல் சுற்றுடன் வெளியேறியது.

ஜூலை இறுதியில் நடைபெறவுள்ள இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள், டி20 தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இலங்கை அணியின் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து ஹசரங்கா விலகியுள்ளார்.

@OfficialSLC
logo
Kizhakku News
kizhakkunews.in