தீபிகா குமாரி
தீபிகா குமாரி ANI

மகளிர் வில்வித்தை: காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வி!

2020 ஒலிம்பிக்ஸிலும் தீபிகா குமாரி காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
Published on

ஒலிம்பிக்ஸ் மகளிர் வில்வித்தை ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

8-வது நாளான இன்று மகளிர் வில்வித்தை ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தீபிகா குமாரி 4-6 என்ற கணக்கில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையிடம் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.

2020 ஒலிம்பிக்ஸிலும் தீபிகா குமாரி காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

logo
Kizhakku News
kizhakkunews.in