ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பெல்ஜியமிடம் தோல்வி அடைந்துள்ளது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று கோலாகலமாகத் தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்திய அணி 7 புள்ளிகளுடன் ஏற்கெனவே காலிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், 4-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது.
இதில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
முதல் பகுதியான 15-வது நிமிடத்தின் முடிவில் 0-0 என்ற கணக்கில் சமமாக இருந்தது.
ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் இந்திய வீரர் அபிஷேக் கோல் அடிக்க இந்திய 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 2-வது பகுதியான 30-வது நிமிடத்தின் முடிவில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 33-வது நிமிடத்திலும், 44-வது நிமிடத்திலும் பெல்ஜியம் அணி கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் நாளை விளையாட உள்ளது.