இந்தியாவுக்கு 3-வது பதக்கம்: ஸ்வப்னில் குசாலே வரலாற்றுச் சாதனை!

“துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற சாதனையைப் படைத்தார்”.
ஸ்வப்னில் குசாலே
ஸ்வப்னில் குசாலேANI
1 min read

துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் 3பி ரைஃபிள் இறுதிச் சுற்றில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இன்று துப்பாக்கிச் சுடுதல் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 50 மீட்டர் 3பி ரைஃபிள் இறுதிச் சுற்று நடைபெற்றது.

இதில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இதன் மூலம் ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற வரலாற்று சாதனையைப் படைத்தார் ஸ்வப்னில் குசாலே.

இதுவரை இந்தியாவுக்கு 3 பதக்கங்களும் துப்பாக்கிச் சுடுதலில் கிடைத்துள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in