ஐபிஎல் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்: சஹால் சாதனை!

மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்காகவும் சஹால் விளையாடியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்: சஹால் சாதனை!
ANI

ஐபிஎல் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸின் யுஸ்வேந்திர சஹால் படைத்துள்ளார்.

இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.

யுஸ்வேந்திர சஹால் 4 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்து முகமது நபி விக்கெட்டை வீழ்த்தினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

153 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள சஹால், 21.6 சராசரியில் 7.73 எகானமியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 6 முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருடைய ஸ்டிரைக் ரேட் 16.76. ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்காகவும் சஹால் விளையாடியுள்ளார்.

டுவைன் பிராவோ 183 விக்கெட்டுகளுடன் சஹாலுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். பியூஷ் சாவ்லா 181 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in