விளையாட்டு
பாராலிம்பிக்ஸ்: வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் யோகேஷ் கத்துன்யா!
இவர் டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
பாராலிம்பிக்ஸ் வட்டு எறிதலில் இந்தியாவின் யோகேஷ் கத்துன்யா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வட்டு எறிதல் எஃப் 56 பிரிவின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் யோகேஷ் கத்துன்யா 42.22 மீ. தூரம் வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இவர் டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதன் மூலம் இந்த பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 2-வது வெள்ளிப் பதக்கமும், ஒட்டுமொத்தமாக 8-வது பதக்கமும் கிடைத்துள்ளது.