
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்காக இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராடை தென்னாப்பிரிக்க அணி ஆலோசகராக நியமித்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்று ஜூன் 11 முதல் ஜூன் 15 வரை லண்டன் லார்ட்ஸில் நடைபெறுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கு முன்பு ஜிம்பாப்வேவுக்கு எதிராக நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்கா. இறுதிச் சுற்றுக்குத் தயாராகும் வகையில் இந்த ஆட்டத்தில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்கா.
ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள மேலும் ஒரு முக்கிய முடிவை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் தென்னாப்பிரிக்க அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்காக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2023-ல் ஓய்வு பெற்ற ஸ்டுவர்ட் பிராட் முதன்முறையாக பயிற்சியாளர் குழுவில் இணைந்து பணியை மேற்கொள்ளவுள்ளார். ஜூன் 9 அன்று நடைபெறும் பயிற்சியில் ஸ்டுவர்ட் பிராட் பங்கேற்கிறார்.
ஸ்டுவர்ட் பிராட் 167 டெஸ்டுகளில் 604 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் 153 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் ஸ்டுவர்ட் பிராடுக்கு முதலிடம்.
மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்று நடைபெறும் லார்ட்ஸில் 28 டெஸ்டுகளில் 113 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். எனவே, எனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும், எப்படி பந்துவீச வேண்டும் என்பதற்கு இவரைவிட வேறு சிறந்த ஆலோசகர் யாராக இருக்க முடியும் என்பதாலும் லார்ஸ்டில் இத்தகைய சாதனைகளைக் கொண்டிருப்பதாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கு இவர் தென்னாப்பிரிக்க அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.