டபிள்யுடிசி இறுதிச் சுற்று: இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளதா?
ANI

டபிள்யுடிசி இறுதிச் சுற்று: இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளதா?

மெல்போர்ன் டெஸ்டில் கடைசி நாள் ஆட்டம் மட்டுமே மீதமுள்ளது. இதில் மூன்று வாய்ப்புகளுக்கும் கதவுகள் திறந்துள்ளன.
Published on

செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 2 விக்கெட்டுகள் வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி டபிள்யுடிசி இறுதிச் சுற்றுக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றுள்ளது.

நடப்பு டபிள்யுடிசியில் 11 டெஸ்டுகளில் விளையாடி 7 வெற்றிகள் மற்றும் 66.67% புள்ளிகளைப் பெற்றுள்ளது தென்னாப்பிரிக்கா.

இதன்மூலம், இறுதிச் சுற்றில் விளையாட ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது. இதற்கு ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இலங்கை இடையே போட்டி நிலவி வருகிறது.

பிஜிடி தொடரில் ஆஸ்திரேலியாவுடன் மெல்போர்ன் மற்றும் சிட்னி டெஸ்டுகள் மட்டுமே இந்தியாவுக்கு மீதமுள்ளன. அதிலும் மெல்போர்ன் டெஸ்டில் கடைசி நாள் ஆட்டம் மட்டுமே மீதமுள்ளது. இதில் மூன்று வாய்ப்புகளுக்கும் கதவுகள் திறந்துள்ளன.

டபிள்யுடிசி இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற வாய்ப்புகள் என்ன?

இரு டெஸ்டுகளிலும் வெற்றி

டபிள்யுடிசி இறுதிச் சுற்றுக்கு இந்தியா நேரடியாகத் தகுதி பெறும்.

ஒரு வெற்றி, ஒரு டிரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரு டெஸ்டுகளில் குறைந்தபட்சம் ஒரு டெஸ்டையாவது இலங்கை டிரா செய்ய வேண்டும்.

இரு டெஸ்டுகளும் டிரா

இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும்.

logo
Kizhakku News
kizhakkunews.in