உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்று: ஆஸி. அணி அறிவிப்பு

பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், நேதன் லயன் என முழுப் பலத்துடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் கேம்ரூன் கிரீன் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்குத் திரும்பியுள்ளார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்று ஜூன் 11 முதல் ஜூன் 15 வரை லண்டன் லார்ட்ஸில் நடைபெறுகிறது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இறுதிச் சுற்றில் விளையாடுகின்றன. இதற்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாத கேப்டன் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளார்கள். முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட கேம்ரூன் கிரீன் சுமார் 12 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான பிஜிடி தொடரில் கலக்கிய சாம் கான்ஸ்டஸ் தனது இடத்தைத் தக்க வைத்துள்ளார்.

பிஜிடி தொடரில் மிட்செல் மார்ஷுக்கு பதில் சேர்க்கப்பட்ட ஆல்-ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியிலும் நீடிக்கிறார். அலெக்ஸ் கேரிக்கு அடுத்து இரண்டாவது விக்கெட் கீப்பராக ஜோஷ் இங்லிஸ் உள்ளார். இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராக மேத்யூ கூனமென் சேர்க்கப்பட்டுள்ளார். பிரெண்டன் டோகட் மாற்று வீரராக அணியுடன் பயணிக்கிறார்.

பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், நேதன் லயன் என முழுப் பலத்துடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. பேட்டிங்கிலும் உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் என நம்பிக்கை நட்சத்திரங்கள் உள்ளார்கள். தொடக்க பேட்டராக சாம் கான்ஸ்டஸ் களமிறங்குவாரா அல்லது கேம்ரூன் கிரீன் முன்கூட்டியே களமிறக்கப்படுவாரா என்பது இன்னும் உறுதியாகாமல் உள்ளது.

ஆஸ்திரேலிய அணி

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேம்ரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டஸ், மேத்யூ கூனமென், மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்

அணியுடன் பயணிக்கும் மாற்று வீரர்: பிரெண்டன் டோகட்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in