
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் அனுமதிச்சீட்டை முறைகேடாக பயன்படுத்தியப் புகாரில் அன்டிம் பங்கலின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இதில் மகளிர் மல்யுத்தம் 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அன்டிம் பங்கல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேறினார்.
இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து அன்டிம் பாங்கல் திரும்பப் பெறப்படுவதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அன்டிம் பங்கலின் அனுமதிச்சீட்டை அவரது சகோதரி முறைகேடாக பயன்படுத்தியப் புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்டிம் பங்கலின் உடைமைகளை எடுக்க அவரது சகோதரி ஒலிம்பிக் கிராமத்துக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதற்காக அன்டிம் பங்கலின் அனுமதிச்சீட்டை எடுத்துச் சென்ற அவரது சகோதரி, ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியே வரும் போது அங்கிருந்த பாதுகாப்பு காவலர்களிடம் பிடிப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவரை அருகில் இருந்த காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதன் விளைவாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து அன்டிம் பாங்கல் திரும்பப் பெறப்படுவதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மேலும், அன்டிம் பங்கல் மற்றும் அவரது உதவியாளரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
மேலும், அவருக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது.