உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்று லண்டன் லார்ட்ஸில் நடைபெறவுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது.
குறிப்பிட்ட 2 ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் விளையாடும் தொடர்களின் முடிவுகள் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும். இறுதியாக புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிச் சுற்று தகுதி பெறும்.
2021, 2023 ஆகிய ஆண்டுகளில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி இரு முறையும் தோல்வி அடைந்தது.
2021-ல் நியூசிலாந்து அணியும், 2023-ல் ஆஸ்திரேலியா அணியும் சாம்பியன் பட்டங்களை வென்றன.
இந்நிலையில் 2025-ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்று லண்டன் லார்ட்ஸில் ஜூன் 11 - 15 வரை நடைபெறவுள்ளது.
கூடுதலாக ஒரு நாள் (ஜூன் 16) ரிசர்வ் நாளாக வழங்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தற்போது இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் முறையே 3,4- வது இடங்களில் உள்ளன.