மகளிர் டி20 உலகக் கோப்பை இன்று தொடக்கம்!

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் நாளை விளையாடுகிறது.
மகளிர் டி20 உலகக் கோப்பை இன்று தொடக்கம்!
1 min read

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன.

பி பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா, மே.இ. தீவுகள் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகளும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகளும் மோதுகின்றன.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் நாளை (அக்டோபர் 4) விளையாடுகிறது.

2023-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியில் தோல்வியடைந்தது.

இம்முறை உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு 2.34 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்திருந்தது. முன்னதாக, 2023-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் முதல் பரிசாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களே வழங்கப்பட்டது.

இந்தியா மோதும் ஆட்டங்கள்

அக். 04 இந்தியா vs நியூசிலாந்து

அக். 06 இந்தியா vs பாகிஸ்தான்

அக். 09 இந்தியா vs இலங்கை

அக். 13 இந்தியா vs ஆஸ்திரேலியா

logo
Kizhakku News
kizhakkunews.in