மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பை வருகிற அக்டோபர் 3 அன்று தொடங்கி அக்டோபர் 20 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் அக்டோபர் 4 அன்று விளையாடவுள்ளது.
இந்தியா மோதும் ஆட்டங்கள்
அக். 04 இந்தியா vs நியூசிலாந்து
அக். 06 இந்தியா vs பாகிஸ்தான்
அக். 09 இந்தியா vs இலங்கை
அக். 13 இந்தியா vs ஆஸ்திரேலியா
முன்னதாக அக். 5 அன்று மதியம் நடக்கவிருந்த இங்கிலாந்து - வங்கதேசம் ஆட்டம் மாலை நடைபெறும் என்றும், அதே தினத்தில் மாலை நடக்கவிருந்த ஆஸ்திரேலியா - இலங்கை ஆட்டம் மதியத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு 2.34 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. முன்னதாக, 2023-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் முதல் பரிசாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களே வழங்கப்பட்டது.