விம்பிள்டன் இறுதிச் சுற்று: ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ்

கடந்த ஆண்டு விம்பிள்டன் இறுதிச் சுற்றிலும் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
அல்காரஸ்
அல்காரஸ்@Wimbledon
1 min read

விம்பிள்டன் இறுதிச் சுற்றில் ஜோகோவிச்சை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்.

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் கார்லஸ் அல்காரஸ் மற்றும் 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச் ஆகியோர் மோதினர்.

கடந்த ஆண்டு விம்பிள்டன் இறுதிச் சுற்றிலும் இவர்கள் இருவர்தான் நேருக்கு நேர் மோதினார்கள். இதில் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் அல்காரஸ் 6-2, 6-2, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் ஜோகோவிச்சை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது முறையாக விம்பிள்டன் கோப்பையை வென்றார்.

இது அல்காரஸுக்கு 4-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். ஏற்கெனவே இந்தாண்டு நடைபெற்ற பிரெஞ்ச் ஓபனிலும் அல்காரஸ் வெற்றி பெற்றிருந்தார். தான் விளையாடிய 4 கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்றிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளார் அல்காரஸ்.

மேலும், ஒரே ஆண்டில் விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் பட்டங்களை வென்ற இளம் வீரர் எனும் சாதனையையும் அல்காரஸ் படைத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in