இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்தும் வில்லியம்சன் விலகல்!

ஏற்கெனவே, முதல் இரு டெஸ்டுகளில் இருந்தும் வில்லியம்சன் விலகினார்.
வில்லியம்சன்
வில்லியம்சன் ANI
1 min read

இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் இருந்து விலகிய நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் கடைசி டெஸ்டில் இருந்தும் விலகியுள்ளார்.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் வென்றது.

இந்நிலையில் 3-வது டெஸ்ட் நவம்பர் 1 அன்று தொடங்குகிறது. இந்த டெஸ்டுக்கான நியூசிலாந்து அணியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

முன்னதாக, இலங்கைக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் இருந்தும் வில்லியம்சன் விலகினார்.

இதன் தொடர்ச்சியாக வருகிற நவம்பர் 28 அன்று தொடங்கவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முழு உடற்தகுதியுடன் பங்கேற்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்தும் வில்லியம்சன் விலகியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in