சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் டேவிட் வீஸ்

பி பிரிவில் இடம்பெற்ற நமீபிய அணி சூப்பர் 8 வாய்ப்பை இழந்தது.
டேவிட் வீஸ்
டேவிட் வீஸ்@icc

நமீபிய வீரரான டேவிட் வீஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியா, இந்தியா, மே.இ. தீவுகள், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

பி பிரிவில் இடம்பெற்ற நமீபிய அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று 2 புள்ளிகளுடன் முதல் சுற்றிலேயே வெளியேறியது. இந்நிலையில் நமீபிய வீரரான டேவிட் வீஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2013-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் வீஸ். 2013 முதல் தென்னாப்பிரிக்க அணிக்காக 20 டி20 மற்றும் 6 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிவுள்ள இவர், 2021 முதல் நமீபிய அணிக்கு விளையடினார். நமீபிய அணிக்காக 34 டி20 மற்றும் 9 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிவுள்ளார். ஒட்டுமொத்தமாக, 54 டி20 ஆட்டங்களில் விளையாடி 624 ரன்கள் அடித்து, 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 15 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 330 ரன்கள் அடித்து, 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் பிறகு டி20 லீக் போட்டிகளில் மட்டும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in