இந்தியா - நியூசி. டெஸ்ட் தொடர்: முஹமது ஷமி எதனால் இடம்பெறவில்லை?

கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள ஷமி...
இந்தியா - நியூசி. டெஸ்ட் தொடர்: முஹமது ஷமி எதனால் இடம்பெறவில்லை?
1 min read

இந்தியா, நியூசிலாந்து இடையே நடைபெறும் 3 டெஸ்ட் ஆட்டங்களைக் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமி இடம்பெறவில்லை.

இந்தியா-நியூசிலாந்து இடையிலான மூன்று டெஸ்டுகளைக் கொண்ட தொடர், வரும் அக்.16-ல் இந்தியாவில் தொடங்குகிறது. நேற்று (அக்.11) அறிவிக்கப்பட்டுள்ள இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்திய அணியின் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமி இடம்பெறவில்லை.

கடைசியாகக் கடந்த 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைப் போட்டிக்கான இறுதிச் சுற்றில் முஹமது ஷமி விளையாடினார். மேலும் அப்போது காயமடைந்த ஷமிக்கு கடந்தாண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஷமி குணமடைந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும் நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஷமி இடம்பெறவில்லை.

எதனால் இந்திய அணியில் ஷமி இடம்பெறவில்லை?

நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் சுழற்பந்து வீச்சாளர்களாக அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் பும்ரா, முஹமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு ஆதரவாக இருக்கும் என்பதால் 3 வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் அணியில் எடுத்துவிட்டு, ஷமிக்கு மேலும் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள ஷமி, விரைவில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னுடைய உடற்தகுதியை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை இந்திய அணியில் ஷமியைப் பார்ப்பது கடினம் தான்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in