மே.இ. தீவுகள் டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3 தமிழக வீரர்கள்! | Team India | BCCI |

இங்கிலாந்துத் தொடரில் விளையாடிய ரிஷப் பந்த், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ஆகாஷ் தீப், அன்ஷுல் கம்போஜ், அர்ஷ்தீப் சிங், ஷார்துல் தாக்குர் ஆகியோர் இடம்பெறவில்லை.
மே.இ. தீவுகள் டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3 தமிழக வீரர்கள்! | Team India | BCCI |
ANI
1 min read

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், என். ஜெகதீசன் ஆகிய மூன்று தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி அக்டோபரில் இந்தியாவுக்குப் பயணம் செய்து இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் அக்டோபர் 2-ல் அஹமதாபாதிலும் இரண்டாவது டெஸ்ட் அக்டோபர் 10-ல் தில்லியிலும் தொடங்கவுள்ளன. இதற்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரிஷப் பந்த் இல்லாததால், ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயமடைந்த ரிஷப் பந்த் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை. எனவே, பிரதான விக்கெட் கீப்பர் பொறுப்பு துருவ் ஜுரெல் வசம் செல்கிறது. என். ஜெகதீசன் கூடுதல் விக்கெட் கீப்பராக அணியில் இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்தவர்களில் ரிஷப் பந்த், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ஆகாஷ் தீப், அன்ஷுல் கம்போஜ், அர்ஷ்தீப் சிங், ஷார்துல் தாக்குர் ஆகியோர் மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை.

சுழற்பந்துவீச்சுக்கு ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளார்கள். வேகப்பந்துவீச்சில் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணாவுக்கு உதவ ஆல்-ரவுண்டராக நிதிஷ் ரெட்டி இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணி

ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெயிஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்‌ஷர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, என். ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), முஹமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.

Team India | Windies Test Series | West Indies Test Series | India Squad | Ravindra Jadeja | Shubman Gill | Sai Sudharsan | N Jagadeesan | Washington Sundar |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in