நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் வாஷிங்டன் சுந்தர்

ரஞ்சி கோப்பையில் தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தர், 3-வது பேட்டராகக் களமிறங்கி 152 ரன்கள் விளாசினார்.
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் வாஷிங்டன் சுந்தர்
1 min read

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளுக்கான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் புனேவில் அக்டோபர் 24-ல் தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் மும்பையில் நவம்பர் 1-ல் தொடங்குகிறது.

முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்துள்ள நிலையில், கடைசி டெஸ்டுகளுக்கான இந்திய அணி குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கடைசி இரு டெஸ்டுகளுக்கான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். புனே டெஸ்டுக்கு முன்பு இவர் இந்திய அணியுடன் இணைகிறார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெயிஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், முஹமது சிராஜ், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர்.

ரஞ்சி கோப்பையில் தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தர், 3-வது பேட்டராகக் களமிறங்கி 152 ரன்கள் விளாசினார். 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் வாஷிங்டன் சுந்தர். மார்ச் 2021-க்கு பிறகு எந்தவொரு டெஸ்டிலும் அவர் விளையாடவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in