உனக்கு பேட் தர முடியாது: ரிங்கு சிங் - கோலியின் செல்லமான வாக்குவாதம்

“ஏற்கெனவே உனக்கு ஒரு பேட்டை கொடுத்தேன். இப்போது 2-வது ஆட்டத்தில் 2-வது பேட் வேண்டுமா?”.
ரிங்கு சிங் - கோலியின் செல்லமான வாக்குவாதம்
ரிங்கு சிங் - கோலியின் செல்லமான வாக்குவாதம்@KKRiders

கோலியிடம் தனக்கு பேட் தருமாறு ரிங்கு சிங் கேட்க, உனக்கு பேட் தர முடியாது என கோலி கூறியுள்ளார். இது தொடர்பான காணொளி அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய முதல் ஆட்டத்தில் கேகேஆர் - ஆர்சிபி அணிகள் விளையாடி வருகின்றன. முன்னதாக இவ்விரு அணிகள் மோதிய ஆட்டத்தில் கேகேஆர் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்திற்கு முன்பாக ரிங்கு சிங்கிற்கு, கோலி ஒரு பேட்டை பரிசாகக் கொடுத்துள்ளார். அதனை ரிங்கு சிங் உடைத்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்திற்கு முன்பாக ரிங்கு சிங் மீண்டும் கோலியிடம் சென்று ஒரு பேட்டை கேட்க அதற்கு கோலி “உனக்கு பேட் தர முடியாது” என கூறியுள்ளார்.

ரிங்கு சிங் - கோலி பேசியது இதுதான்

ரிங்கு: நீங்கள் கடந்த முறை கொடுத்த பேட்டை ஒரு சுழற்பந்து வீச்சாளரின் பந்தை எதிர்கொள்ளும்போது உடைத்துவிட்டேன்.

கோலி: என்னுடைய பேட்டையா?

ரிங்கு: ஆமாம்.

கோலி: சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராகவா? எப்படி? இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

ரிங்கு: நான் உங்களிடம் தெரிவித்தேன். அவ்வளவு தான்.

கோலி: எந்த பிரச்னையும் இல்லை. என்னிடம் சொன்னதே மகிழ்ச்சி. ஆனால் எனக்கு எந்த தகவலும் தேவையில்லை.

இதைத் தொடர்ந்து மீண்டும் அங்கிருந்த கோலியின் பேட்டை எடுத்து, ரிங்கு சிங் பந்தை வைத்து தட்டிக் கொண்டிருந்தார். அப்போது கோலி அந்த பேட் சரியில்லை என சொல்ல, எனக்கு இன்னொரு பேட் கொடுக்க முடியுமா? என கேட்டார். அதற்கு கோலி உனக்கு பேட் தர முடியாது என சொல்ல, ரிங்கு சிங் கோலியிடம் அவரது பேட்டை கொடுத்துவிட்டார்.

கோலி: ஏற்கெனவே உனக்கு ஒரு பேட்டை கொடுத்தேன். இப்போது 2-வது ஆட்டத்தில் 2-வது பேட் வேண்டுமா?. உன்னால், பின் விளைவுகளை நான் சந்திக்கிறேன்.

ரிங்கு: இம்முறை பேட்டை உடைக்க மாட்டேன். நான் உடைந்த பேட்டை உங்களிடம் காட்டுகிறேன்.

இவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டனர்.

இவ்விருவரும் பேசிக்கொண்ட காணொளி அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in