மோட்டார் படகுப் போட்டியில் கோலியின் அணி வெற்றி | Virat Kohli

மொனோகோ சுற்றில் முதலிடத்தைப் பிடித்துள்ளதன் மூலம், ப்ளூ ரைசிங் அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
மோட்டார் படகுப் போட்டியில் கோலியின் அணி வெற்றி | Virat Kohli
படம்: https://www.instagram.com/team_bluerising/
1 min read

இ1 எனும் உலகின் முதல் ஆல்-எலக்ட்ரிக் ஆஃப்ஷோர் மோட்டார் படகுப் போட்டி மொனோகோவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற ப்ளூ ரைசிங் அணியின் உரிமையாளர் விராட் கோலி. இவருடைய அணியின் ஓட்டுநர்கள் அமெரிக்காவின் ஜான் பீட்டர் மற்றும் ஜமைக்காவின் சாரா மிசிர்.

கிரிக்கெட்டுக்கு எப்படி ஐசிசியோ அதுபோல இப்படகு போட்டிக்கு யுஐஎம். இது தான் சர்வதேச அளவில் இந்த விளையாட்டை நிர்வகிக்கும் அமைப்பு.

இ1 போட்டியில் பங்கேற்ற மற்ற அணிகளின் உரிமையாளர்களும் விராட் கோலியைப்போல பிரபலங்கள் தான். டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால், நடிகர் வில் ஸ்மித், பாஸ்கட் பால் வீரர் லெப்ரோன் ஜேம்ஸ் உள்பட பலர் அணியின் உரிமையாளர்களாக உள்ளார்கள். இவர்களுடைய அணிகளும் விராட் கோலியின் அணியுடன் போட்டியிட்டன.

இப்போட்டி 2025-ல் சௌதி அரேபியாவின் ஜெட்டா, கத்தாரின் டோஹா, குரோஷியா, இத்தாலி - ஸ்விட்சர்லாந்து, மொனோகோ, நைஜீரியா, அமெரிக்கா ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. மொனோகோவில் நடைபெற்ற சுற்றில் தான் விராட் கோலியின் ப்ளூ ரைசிங் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை முறையே பிராடி மற்றும் பிரேசில் அணிகள் பிடித்தன. அமெரிக்க கால்பந்து வீரர் டாம் பிராடியின் அணி தான் பிராடி. பொலிவியா மற்றும் அமெரிக்க தொழிலதிபர் மார்சிலோ கிளாரின் அணி தான் பிரேசில் அணி.

முதல் 4 சுற்றுகளில் விராட் கோலியின் ப்ளூ ரைசிங் ஒருமுறைகூட முதலிடத்தைப் பிடிக்கவில்லை. மொனோகோ சுற்றில் முதலிடத்தைப் பிடித்துள்ளதன் மூலம், ப்ளூ ரைசிங் அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. நைஜீரியா மற்றும் அமெரிக்காவில் முறையே அக்டோபர் 5 மற்றும் நவம்பர் 8-ல் இப்போட்டியின் அடுத்த சுற்றுகள் நடைபெறவுள்ளன.

Monaco | Virat Kohli | Blue Rising | Team Blue Rising | E1 race | UIM E1 World Championship| All-Electric Raceboat Series

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in