அனைத்தையும் சாதித்த பிறகே ஓய்வு: விராட் கோலி

“இதைச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டே எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க நான் விரும்பவில்லை”.
விராட் கோலி
விராட் கோலி ANI

ஓய்வை அறிவித்த பிறகு என்னைக் கொஞ்ச காலம் பார்க்கமுடியாது என விராட் கோலி பேசியுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான கோலி வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில விமர்சனங்கள் எழுந்தன.

முன்னதாக டி20-ல் அவரது ஸ்ட்ரைக் ரேட் குறித்து பலரும் விமர்சித்த நிலையில், “வர்ணனை பெட்டியில் அமர்ந்து விமர்சிப்பவர்கள், இதுபோன்ற சூழல்களில் இருந்திருப்பீர்களா? என்று தெரியவில்லை. தங்கள் சொந்தக் கருத்துகளை அங்கே உட்கார்ந்து யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், களத்தில் எப்போதும் அணிக்காக சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியும்” என பதிலளித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கோலியிடம் அவரது ஓய்வு முடிவு குறித்து கேட்க்கப்பட்ட கேள்விக்கு, “அனைத்தையும் சாதித்த பிறகே ஓய்வு” என பதிலளித்துள்ளார்.

கோலி பேசியதாவது:

“ஒரு விளையாட்டு வீரராக, அனைவருக்கும் ஓய்வுக் காலம் என்பது நிச்சயம் உண்டு. இதைச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டே எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க நான் விரும்பவில்லை.

இதுவரை செய்ய முடியாத விஷயத்தை செய்து முடிக்காமல் விட்டுவிட்டு அதற்காக பின்னர் வருத்தப்படக் கூடாது என நினைக்கிறேன். எனவே, அனைத்தையும் சாதித்த பிறகே ஓய்வு. ஓய்வை அறிவித்த பிறகு என்னைக் கொஞ்ச காலம் பார்க்கவே முடியாது. எனவே, களத்தில் இருக்கும் வரை நான் செய்ய நினைப்பதை எல்லாம் செய்து முடித்துவிட வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in